தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Mahesh Babu 37 Titled Sarkaru Vaari Paata

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை தொடர்ந்து இவர் மஹரிஷி இயக்குனர் வம்சியுடன் தனது 36ஆவது படத்திலும்,கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் 37ஆவது படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Mahesh Babu 37 Titled Sarkaru Vaari Paata

மகேஷ்பாபு நடிக்கும் 37ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.பரசுராம் இயக்கும் இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். 

Mahesh Babu 37 Titled Sarkaru Vaari Paata