எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு விமானியாக நடித்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. சமீபத்தில் சபரி மலையில் இருந்து திரும்பினார் சிம்பு. 

maha

யு.ஆர்.ஜமீல் இயக்கிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 

maha maha

சமீபத்தில் படத்தின் எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகா இணைந்திருக்கும் ரொமான்டிக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது STR-ன் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகியது. இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு துவங்கப்படும்.