நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. 

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்த படத்தில் பார்வதி ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.

தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் சமீபத்தில் துவங்கியது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். 

மாறா பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், இப்படத்தை தயாரித்துள்ள பிரமோத் ஃபிலிம்ஸ், அமேசான் பிரைமுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது. அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே படத்தின் ரிலீஸ் பற்றி தெரியவரும். 

தற்போது இந்த படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மாதவன் கையில் காஃபி மக்குடன் காணப்படுகிறார். ஷிவதா மற்றும் ஷ்ரத்தா கொண்ட மற்றோரு புகைப்படமும் ரசிகர்களை ஈர்க்கிறது. இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள். 

இந்த படத்தை தொடர்ந்து மாதவன் கைவசம் ராக்கெட்ரி திரைப்படம் கைவசம் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.