மாறா திரைப்படத்திற்கு பிறகு மாதவன் இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாதவன். ஏப்ரல் 1 அன்று ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ராக்கெட்ரி படத்தின் ட்ரைய்லர் வெளியிடப்பட்டது.

இதற்குத் திரையுலகின் பிரபலங்கள் பலர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது ராக்கெட்ரி திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் நம்பி நாராயணனும், நானும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் கவுரவத்தைப் பெற்றோம். ராக்கெட்ரி திரைப்படத்தைப் பற்றிப் பேசினோம். படத்தின் காட்சிகள் குறித்தும், நம்பி நாராயணனுக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் பிரதமர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்துவிட்டோம். இந்த கவுரவத்துக்கு நன்றி என்று மாதவன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு சம்மருக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.