இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் D40. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

karthiksubbaraj dhanush40

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக தனுஷ் சமீபத்தில் பதிவு செய்தார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடிக்கிறார். சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. இதுதான் படத்தின் டைட்டில் என்றும் பேசப்ப்படுகிறது. 

viveklyricist

vivek

தற்போது பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் D40 படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷுடன் D40 படத்தில் நான்காவது பாடலுக்கு பணிபுரிவது பற்றியும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.