ஓவியா ஹேர்ஸ்டைலில் லாஸ்லியா ! புதிய ப்ரோமோ வெளியீடு
By Aravind Selvam | Galatta | August 04, 2019 10:09 AM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தீதும் நன்றும் பிறர் தந்து வருவதில்லை இது வீட்டில் இருக்கும் யாருக்கும் புரிவதில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.லாஸ்லியா ஓவியா ஹேர்ஸ்டைலில் இருக்கிறார்.இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நடக்கவிருக்கிறது.