இன்றைய தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது முதல் படமான மாநகரம் படத்திலேயே குறிப்பிடப்படும் இயக்குனராக முத்திரை பதித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக, அடுத்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜின் ஃபேன் பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ஆல் டைம் ரெகார்டாக வசூல் சாதனை படைத்தது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் மீண்டும் தளபதி விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்றது.

தளபதி விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCU-ல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதன்முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR பாடிய தீ தளபதி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

Director #LokeshKanagaraj watching the sensational hit #TheeThalapathy from #Varisu#Thalapathy67 preparation underway. @Dir_Lokesh pic.twitter.com/wmiC4eKV8d

— George (@VijayIsMyLife) December 9, 2022