கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

Lokesh Kanagaraj About Master Post Production

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை XB ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

Lokesh Kanagaraj About Master Post Production

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த ருசிகர அப்டேட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியதாக பதிவிட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். இயல்பு நிலை வந்தவுடன் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Go ahead, make my day ✌🏻#MASTER #POSTPRODUCTION

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on