தமிழ் சினிமாவின் ஸ்டார் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெகார்டாக வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து தயாராகும் தளபதி 67 திரைப்படம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்த்த ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இது குறித்த இதர அறிவிப்புகள் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா 2022 நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது OTT ப்ராஜெக்ட் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படிப் பேசுகையில்,

“நாங்கள் சமீபத்தில் OTTக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆலோசனையை நடத்தினோம். அதை நான் இயக்கவில்லை. அனைத்து OTT தளங்களுக்கும் முயற்சி செய்தோம். ஆனால் நான் யோசித்த விதம் எதற்காக OTT என யோசித்தால், நமக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. நமக்கு எந்த படங்களை எல்லாம் தியேட்டர்களில் வெளியிட முடியும் என. கண்டிப்பாக இங்கு எல்லா ஃபிலிம் மேக்கர்களும் படம் பண்ண வருவது தியேட்டர்களுக்கு தான். ஏனென்றால் உங்களுக்கு தெரியும் யார் சிரிக்கப் போகிறார்கள்? யார் அழ போகிறார்கள் என, நாம் மட்டும் உட்கார்ந்து அதை மிகவும் ரசித்து பார்த்துக் கொண்டிருப்போம். அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். ஆனால் OTTல் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. நாம் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று எப்படி படம் பார்க்கிறார்கள் என தெரியாது. அதையெல்லாம் தாண்டி ஏன் OTT? என நினைத்து ஒன்று செய்தோம் என்றால்? ஒருவேளை தியேட்டரில் ஒரு கூட்டமாக உட்கார்ந்து இதை பார்க்க முடியாது, இதை தனிமையில் தான் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அது OTT. அப்படிதான் நான் OTTக்கு ஒன்று பண்ணலாம் என யோசித்தேன். என்னிடம் அதற்கான ஒரு கன்டென்ட் இருக்கிறது. அதை கட்டாயமாக தியேட்டரில் வெளியிட முடியாது. எனவே இது OTTல் நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் தனியாக பார்க்க விரும்பினால் நீங்கள் தனிமையில் பார்த்துக் கொள்ளலாம். இது அடல்ட் ஆக இருக்கும் என நான் கூறவில்லை. எல்லாருக்குமே ஒரு தொந்தரவு தரக்கூடிய அல்லது கசப்பான அனுபவமாக இருந்து விடுமா அல்லது கொண்டாடுவார்களா என்பது எதுவும் எனக்குத் தெரியாது. ஏன் என்றால் அது தனியாக உட்கார்ந்து பார்க்கிற மாதிரி. எனவே அதில் நாங்கள் ஒரு ஆலோசனை செய்தோம். அதை செய்யலாம் என்று இருக்கிறோம். நான் என்னுடைய OTT பற்றிய புரிதல்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அந்த முழு வீடியோ இதோ…