சினிமா துறையில் நடிகர்களின் வாழ்வில் ஒளியேத்தி வைக்கும் கலைஞர்கள் லைட்மேன். தொழில்நுட்ப கலைஞர்களான லைட்மேன்களின் பங்களிப்பு திரைத்துறையில் ஏராளம். படத்திற்கு படம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பனிமழையோ, அனல் வெயிலோ லைட்மேன்களின் பணியை ஒரே வரியில் விளக்கிட முடியாது. இப்படிப்பட்ட லைட்மேன்களின் வருமானம் மிகக் குறைவே. கொரோனா வைரஸ் காரணமாக திரைத்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. 

Lightman Manimaran Passed Away

இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர்களின் ஃபேவரைட் லைட்மேனாக திகழ்ந்த மணிமாறன் இன்று காலமானார். சிறுநீரக பிரச்சனை காரணமாக தவித்து வந்த மணிமாறனின் இழப்பு, பல திரைப்பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு குறித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். 

Lightman Manimaran Passed Away

அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு கெட்ட செய்தி.மணிமாறன் அண்ணன் மிகவும் இனிமையானவர், எனெர்ஜியுடன் உழைக்கக்கூடியவர். அவருடன் பல படங்களில் பணிபுரிந்துள்ளேன். கடவுளே இதுபோன்ற கெட்ட செய்தி இனி வரக்கூடாது என்று பதிவு செய்துள்ளார். மேலும் நடிகர் பாபி சிம்ஹா, ஆதவ் கண்ணதாசன் போன்ற நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் தொடர்ச்சியாக பல திரைத்துறை சார்ந்த கலைஞர்களின் இறப்பு செய்தி நம் கண்களில் படுகிறது. இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் சினிமா சார்ந்த தொழிலாளர்கள்.