அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், கஜராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்தனர். தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. 

OhMyKadavule

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்து அசத்தினார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. 

AshokSelvan

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், படத்தில் இடம்பெற்ற கதைப்போமா பாடலை வீட்டில் இருந்தபடியே பாடியுள்ளார். சேஷா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். படத்தில் சித் ஸ்ரீராம் பாடினார்.