தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்தார். இதற்கு முன் ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். 

vivekindian2

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால், யோகிபாபு, டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

indian2 Indian2

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் துவங்கியது.