திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

தற்போதுள்ள சோஷியல் மீடியா ட்ரெண்டில் ஆண்களை, பெண்களாகவும், பெண்களை ஆண்களாகவும் மாற்றும் FaceApp எனும் ஆப் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றது. நடிகைகள் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஆணாக மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் வெளியான புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலானது. 

இந்நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், எடிட் செய்து ஆண் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தை அசத்தி வருகிறது. நான் ஆணாக இருந்தால் கூட, அவ்வளவு மோசமாக இருக்க மாட்டேன் என்ற கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் குஷ்பு.

நடிகை குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்த பலருக்கும் நடிகர் அமீர்கான் தான் நினைவுக்கு வருகிறதாம். அப்படியே அமீர்கான் மாதிரி அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை குஷ்புவின் மூக்கில் உள்ள மூக்குத்தி மறையாததையும் ரசிகர்கள் நோட் பண்ணி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நாள் தோறும் கொரோனா வைரஸ் செய்திகள் மற்றும் நெகட்டிவ் செய்திகளால் சமூக வலைதளங்கள் நிறைந்திருந்தாலும், அப்பப்போ இது போன்ற ஜாலியான பதிவுகள் நெட்டிசன்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். 

சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.