2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தின் மூலம் இந்திய முழுவதும் மிகவும் பிரபலமானவராகவும் பலகோடி ரசிகர்களையும் பெற்றார் யாஷ்.இவரது KGF இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜூலை 21ஆம் தேதி 2021-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.

கொரோனவால் ஷூட்டிங்குகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவும் விதமாக கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி நிதியுதவி அளித்துள்ளார் யாஷ்.21 துறைகளைச் சேர்ந்த 3000 தொழிளாளர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு ரூ 5000 செலுத்தப்படும் என்று ஒரு அறிக்கையை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் யாஷ்.இவர் செய்த இந்த உதவியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Yash (@thenameisyash)