கடந்த வருடம் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க ,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

KGF 2 Second Look To Release On Jan 8th Yash

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

KGF 2 Second Look To Release On Jan 8th Yash

இந்த படம் வரும் ஏப்ரல் 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் 6ஆம் தேதி வரை தள்ளிப்போனதால் இந்த டீஸர் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ரசிகர்களுக்காக யாஷின் பிறந்தநாள் அன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

KGF 2 Second Look To Release On Jan 8th Yash