சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப்.நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் நாயகி காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.இயக்குனர் பாரதிராஜா, சூரி,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை சீனாவில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.Screen Scene நிறுவனம் இந்த படத்தை விநியோகம் செய்கிறது.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 22ஆம் தள்ளிப்போகிறது என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.