தென்னிந்திய திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கூடுதல் கவணம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பென்குயின் படத்தில் நடித்துள்ளார். 

Keerthy Sureshs Penguin Movie Teaser Keerthy Sureshs Penguin Movie Teaser

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 53 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து, ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.  

Keerthy Sureshs Penguin Movie Teaser

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியானது. த்ரில்லர் நிறைந்த இந்த டீஸர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 
ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.