கீர்த்தி சுரேஷ் படம் குறித்த ருசிகர தகவல் !
By Aravind Selvam | Galatta | July 05, 2020 17:06 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.
இவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ரங்தே படத்தின் பர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிஸ் இந்தியா திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது என்று படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அடுத்தடுத்த பாடல்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமன் அடுத்ததாக தளபதி 65 படத்தில் பணியாற்றவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#missindiabgm works started ▶️🤍
♥️🎹
@KeerthyOfficial @NARENcloseup @smkoneru
More songs coming your way after the super hit #kothaggakothagga !! pic.twitter.com/GJ1ug3Ych8— thaman S (@MusicThaman) July 4, 2020
Our deepest condolences to VIP director and cinematographer Velraj
05/07/2020 04:16 PM
AR Rahman makes Sushant Singh fans happy with an announcement
05/07/2020 03:30 PM
Ram Gopal Varma booked by police for his caste-based Murder film
05/07/2020 01:49 PM
Soorarai Pottru New teaser | Suriya | Sudha Kongara | GV Prakash
05/07/2020 12:43 PM