தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

rajini rajini

இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது. தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நேற்று மாலை சும்மா கிழி பாடல் வீடியோ வெளியாகி இணையத்தை தெரிக்கவிடுகிறது. 

sunpictures

படத்தில் நடிகர் சூரி இணைந்துள்ளார் என்ற செய்தி நேற்று சன் பிக்சர்ஸ் வாயிலாக வெளியானது. திலீப் சுப்பராயன் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கவுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது. தற்போது படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. சூப்பர்ஸ்டாருடன் கீர்த்தி நடிப்பது இதுவே முதல் முறையாகும். நெற்றிக்கண் படத்தில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.