தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது.

தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கில் கீர்த்தி 20, நிதின் ஹீரோவாக நடிக்கும் நிதினின் 29படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

66ஆவது தேசிய விருதுகளை இன்று அரசு அறிவித்தது.இதில் சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.மகாநதி படத்தில் இவரது நடிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.கலாட்டா சார்பாக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.