தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக அசத்தியவர் அருண் பாண்டியன். இவர் நடித்த இணைந்த கைகள், தேவன், ஊமை விழிகள் போன்ற படங்களை இன்றளவும் ரசித்து வருகின்றனர் திரை விரும்பிகள். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தும்பா படத்தில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன், தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கோகுல் இயக்கவுள்ளார். 

Keerthi Pandian Learning Agriculture In Lockdown

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Keerthi Pandian Learning Agriculture In Lockdown

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திருநெல்வேலியில் குடும்பத்துடன் இருக்கும் கீர்த்தி பாண்டியன், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்னர் ட்ராக்டரில் நிலத்தை உழும் வீடியோவை பதிவு செய்தார் . தற்போது வயலில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றுக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.