கதிரின் சர்பத் புதிய பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | August 20, 2019 12:22 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துதுள்ளார்.இது தவிர ஜடா,சர்பத் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
பிரபாகரன் இயக்கத்தில் கதிர் நடிப்பில் தயாராகி வரும் சர்பத் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
ரகசியா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான கரிச்சான் குயிலே என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்