மாஸ்டர் படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த பிகில் பிரபலம் !
By Aravind Selvam | Galatta | July 03, 2020 19:07 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பிரபல நடிகர் கதிர் வெளியிட்டுள்ளார்.பிகில் படத்தில் இவர் விஜயுடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தனது தந்தையின் 53ஆவது பிறந்தாள் முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கதிர்.சின்ன ரோலாக இருந்தாலும் அவரது நீண்ட நாள் கனவு மாஸ்டர் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் கதிர்.
WOW: This young star hero's father has acted in Thalapathy Vijay's Master!
03/07/2020 06:34 PM
Yuvan's trending reply to a fan about Ajith's Valimai! Check Out!
03/07/2020 06:00 PM
New Mass Promo Video from KGF | Yash | Prashanth Neel
03/07/2020 04:50 PM
A.R.Rahman shares a fun throwback video | Sid Sriram at his energetic best!
03/07/2020 04:00 PM