பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், தனது பக்கம் உள்ள நியாயத்தை சாண்டியிடன் எடுத்துரைக்கிறார் வனிதா. அருகில் சேரன், லாஸ்லியா, முகென் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கஸ்தூரி மற்றும் சாக்ஷி ஷெரினிடம் சென்று ஆறுதல் கூறுகின்றனர்.

sherin

biggboss

தர்ஷன் எலிமினேட் ஆகி வெளியே சென்றதற்கு ஷெரின் தான் காரணம் என்ற விஷயத்தை போட்டுடைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை கேட்ட ஷெரின் மனமுடைந்து அழத்துவங்கினார். டாஸ்குகள் முடிந்த நிலையில் இது போன்ற விஷயங்கள் நடப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இறுதி போட்டிக்கு சில நாட்களே உள்ளது என்பது கூடுதல் தகவல்.

vanitha

sandy

sakshi

விதவிதமா ஊதி ஊதி பெரிது பண்றது இந்த வீட்டை பொறுத்தவரை புதிதல்ல என்று கூறுகிறார் கஸ்தூரி. தர்ஷன் மற்றும் கவின் வருகை மட்டுமே பாக்கி உள்ளதால் எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் வீட்டினர்.