தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குகிறார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்த சிறந்த மியூசிக்கல் கேங்ஸ்டர் பிளாக் காமெடி திரைப்படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். மேலும் சிறந்த படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜிகர்தண்டா படத்தில் கௌரவத் தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தன. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜிகர்தண்டா ரீமேக் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிகர்தண்டா திரைப்படத்தின் பார்ட் 2 குறித்து அறிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஜிகர்தண்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பண்ணிகளை தொடங்கியதாக தெரிவித்தார்.

இதனிடையே இன்று டிசம்பர் 2ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான DSP திரைப்படத்தின் படக்குழுவினர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை அடுத்து தயாரிப்பதாக அறிவித்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.அந்த முழு பேட்டி இதோ…