காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.

Karthik Dial Seytha Yenn STR Making Video

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய குயின் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Karthik Dial Seytha Yenn STR Making Video

இதனை தொடர்ந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை கொரோனா நேரத்தில் உருவாக்கியுள்ளனர்.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இந்த குறும்படம் உள்ளது.STR,த்ரிஷா நடித்துள்ள இந்த குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த குறும்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த குறும்படத்தில் STR-ன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.