கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ள.சர்தார் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் கார்த்தி.

விருமன் படத்தினை 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.கொம்பன் படத்தினை அடுத்து இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளார் கார்த்தி.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் வரும் மே 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.