தமிழ்த் திரையுலகின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி  ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து இயக்கிய கைதி படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்தார். விஜய்-விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும் மெகா ஹிட்டானது.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பாடல்கள் மற்றும் கதாநாயகி இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் அதிரடியான காட்சி அமைப்புகளோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான கைதி திரைப்படம் தற்போது ரஷ்யாவில் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.  கிட்டத்தட்ட 297 திரையரங்குகளில் ரஷ்யாவில் கைதி திரைப்படம் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.