கார்த்தியின் ஜப்பான் படக்குழு கொடுத்த ஸ்பெஷல் பொங்கல் ட்ரீட்... அட்டகாசமான புதிய GLIMPSE இதோ!

கார்த்தியின் ஜப்பான் பட புதிய போஸ்டர் வெளியீடு,karthi in japan movie crew shared a surprise pongal special poster | Galatta

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் நல்ல கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த விருமன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படைப்பில் வல்லவரையன் வந்திய தேவனாக ரசிகர்களின் இதயங்களில் வசீகரித்தார் கார்த்தி.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கடந்த நவம்பரில் பூஜையுடன் தொடங்கப்பட்ட ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜப்பான் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் தற்போது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் கார்த்தியின் ஜப்பான் படக்குழுவினர் படத்திலிருந்து அட்டகாசமான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த புதிய போஸ்டர் இதோ…
 

Japan’s pongal wishes to all dear ones! pic.twitter.com/VvFecaAYZP

— Karthi (@Karthi_Offl) January 15, 2023

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

தனுஷின் வாத்தி பட கொண்டாட்டத்திற்கு ரசிகர்களை அலர்ட் செய்த படக்குழு-ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு பதிலடி அறிவிப்பு!
சினிமா

தனுஷின் வாத்தி பட கொண்டாட்டத்திற்கு ரசிகர்களை அலர்ட் செய்த படக்குழு-ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு பதிலடி அறிவிப்பு!