நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் படம் க/பெ. ரணசிங்கம். இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கெளரவ பாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

kapaeranasingam kapaeranasingam

விஜய் சேதுபதி காட்சிகளைத் தவிர்த்து இதரக் காட்சிகள் அனைத்துக்குமான படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் முழுமூச்சில் நடைபெற்று வந்தது. சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

vijaysethupathi kjrstudios

தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்ற காட்சிகளைப் படமாக்கி முடித்தனர் படக்குழு. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இதுதான் என்றும் பதிவு செய்துள்ளனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.