நீதிபதியிடம் திமிரு காட்டிய இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 39 வயதான சுரேஷ், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தக்கலை போலீசார், இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

judge

இந்நிலையில், வழக்கு தொடர்பாக அபராத தொகை 2 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்துவதற்கு பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட் எண் 1 வது நீதிமன்றத்திற்குள் சுரேஷ் சென்றார். அங்கு, மாஜிஸ்திரேட் அவரிடம் விசாரித்தபோது, சுரேஷ் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.

இதனால், “நீதிமன்ற மரபுப்படி நடக்க வேண்டும்” என்று மாஜிஸ்திரேட் அறிவுறுத்தியுள்ளார். “மீறினால், தண்டனை கிடைக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், “அப்படியானால் எனக்குத் தண்டனை கொடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று திமிராகக் கூறியுள்ளார்.

சுரேஷ் நீதிமன்றத்திற்குள்ளேயே திமிராக நடந்துகொண்டதால், அவரை 7 நாட்கள் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து, சுரேஷ் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.