மலையாள ஸ்டாரான துல்கர் சல்மான், வாயை மூடி பேசவும் எனும் தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. 

dulquer

தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். மசாலா கஃபே இசையமைத்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்துள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ், ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். 

gauthammenon dulquer

படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவான இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியானது.