சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி 2019-ல் வெளியான படம் விஸ்வாசம். அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரண்டு படங்களில் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. கே.ஜெ.ஆர் நிறுவனம் இந்த படத்தை விநியோகம் செய்தது. 

viswasam
 
இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர். தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது. 

viswasam

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். இமான் இசையில் சித்ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார்.