தமிழ் திரை உலகின் இன்றியமையாத தயாரிப்பு நிறுவனமாக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த O2 & வட்டம் ஆகிய படங்கள் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முன்னதாக கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் போலா திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.  இதனிடையே இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் கணம்.

பிரபல தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் கணம் (தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம்) திரைப்படத்தில், ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்யும் கணம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

கணம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கணம் திரைப்படத்தின் 2வது பாடலாக தாளம் தட்டும் பாடல் தற்போது வெளியானது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் பென்னி தயால் பாடியுள்ள கலக்கலான தட்டும் தாளம் பாடலைக் கீழே உள்ள லிங்கில் காணலாம்.