உள்ளங்கைகளில் இணையதளம் குடியேறுவதற்கு முன்பே சினிமாவை பல கோணங்களில் ஆராய்ந்து இணையத்தின் வழியாக உள்ளங்களில் சேர்த்த பெருமை கலாட்டாவையே சேரும். பத்தொன்பது ஆண்டு கலாட்டா வரலாற்றில்.. அயராது கலைத்துறையின் மகிமையை உலகிற்கு பறைசாற்றி மகிழ்ச்சி கண்டோம். விருது மேடைகள் அமைத்து கலையை கலைஞர்களை கொண்டாடி அதில் பெருமிதம் கொண்டோம்.

Kamal Haasan In Galatta Nakshatra Awards

2018 நக்ஷத்ரா விருதுகள். தொலைக்காட்சி, வானொலி, மற்றும் இணையதளத்தின் மின்னும் நட்சத்திரங்களை மேடையேற்றி அங்கீகரித்து அழகுபார்த்தது. அதன் இமாலய வெற்றியின் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கலாட்டா நக்ஷத்ரா விருதுகள்.

Kamal Haasan In Galatta Nakshatra Awards

அக்டோபர் 19-தேதி சென்னையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் சின்னத்திரை மற்றும் இணையதள பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் சிறப்பாக உலகநாயகன் கமல் ஹாசன் தோன்றி கூடுதல் சிறப்பை அளித்தார். மிர்ச்சி சிவா, RJ பாலாஜி, பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Kamal Haasan In Galatta Nakshatra Awards