100 வருடங்களை கடந்து தொடரும் இந்திய சினிமாத்துறையின் நீண்ட பயணத்தில் நெடுந்தூரம் பயணித்தவர் கமல்ஹாசன்.தனது ஐந்து வயதில் நடிப்பதை தொடங்கியவர் தற்போது சினிமாவில் தனது 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை கோலாகலமாக கொண்டாட ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் முடிவுசெய்துள்ளது.

Kamal 60 Celebration Plans Ilayaraaja Rajinikanth

திரைத்துறையில் பல வித்தியாசமான கதைகளையும் , பல புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றவர்.நவம்பர் 7ஆம் தேதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு கமலின் 60 ஆண்டுகளை மூன்று நாட்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

Kamal 60 Celebration Plans Ilayaraaja Rajinikanth

கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி கமலின் தந்தை டி.சீனிவாசன் அவர்களின் திருவுருவச்சிலையை பரமக்குடியில் திறந்துவைக்கிறார்.தொடர்ந்து நவம்பர் 8ஆம் தேதி தனது திரையுலக குரு இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் திருவுரசிலையை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கிறார்.

Kamal 60 Celebration Plans Ilayaraaja Rajinikanth

மேலும் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அன்று கமல் நடித்த ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளது.நவம்பர் 9ஆம் தேதி இளையராஜா தலைமையில் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமலின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவலையும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.