லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் ப்ரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் காளிதாஸ். பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

bharath

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியுள்ளது. நாளைய இயக்குநர் சீசன் 3-ல் கலந்து கொண்ட ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

bharath bharath

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.