விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா இறந்த நிலையில் புதிய முல்லையாக யார் நடிப்பார் என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருந்து வருகிறது.சிலர் முல்லை கதாபாத்திரத்தை அப்படியே முடித்துக்கொள்ளவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் முல்லையாக சரண்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது ஆனால் முல்லையாக நடிக்கப்போவதில்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து இன்னும் சில நடிகைகள் முல்லையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

தற்போது இந்த தொடரில் முல்லையாக பாரதி கண்ணம்மா தொடரில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் காவியா அறிவுமணி நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் சீரியல் குழுவினரோ,விஜய் டீவியினரோ இன்னும் தரவில்லை.ஆனால் இந்த தொடரில் சித்ராவுடன் நடித்தவரும்,சித்ராவின் தோழியுமான ஹேமா இது குறித்த ஒரு செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.எனவே காவியா இந்த தொடரில் முல்லையாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது

kaavya arivumani most likely to replace chitra vj in pandian stores serial