வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது.

மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.

விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.இதில் சமீபத்தில் இணைந்த தொடர் காற்றுக்கென்ன வேலி.இந்த தொடரின் நாயகனாக அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் ராஜு நடிக்கிறார்.

பிரியங்கா இந்த தொடரின் நாயகியாக நடிக்கிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த மாளவிகா அவினாஷ் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் இவருக்கு பதிலாக பிரபல நடிகை இணைந்துள்ளார் இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.