விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று காற்றின் மொழி.ராஜா ராணி தொடரில் பிரபலமான சஞ்சீவ் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.பிரியங்கா ஜெயின் இந்த தொடரின் நாயாகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வந்தது.சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் நிறைவுக்கு வந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த தொடரில் ஊமையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நாயகி பிரியங்கா ஜெயின்.

தெலுங்கில் சில தொடர்கள் மற்றும் படங்கள் நடித்து பிரபலமாக இருந்த இவர் இந்த தொடரின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானவராக மாறினார் பிரியங்கா.அடுத்து எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரியங்கா தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம்,யூடியூப் போன்றவற்றில் அவ்வப்போது பதிவிட்டு கலந்துரையாடி வருவார்.தற்போது தனது யூடியூப்பில் நீச்சல்குளத்தில் இருப்பதுபோல ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார் ப்ரியங்கா,இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.