தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.இவர் நடித்துள்ள தம்பி படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

Jyothika Ponmagal Vandhal Shoot Wrapped Suriya

இதனை தொடர்ந்து புதுமுக இயக்குனர் Fredrick இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா,பாக்யராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Jyothika Ponmagal Vandhal Shoot Wrapped Suriya

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.