தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் Jr.NTR.கடைசியாக Aravinda Sametha Veera Raghava என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் RRR படத்தில் நடித்து வருகிறார்.

Jr NTR To Team Up With KGF Director Prasanth Neel

இந்த படத்தில் இவரோடு இணைந்து ராம்சரண் மற்றுமொரு ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படம் பொங்கல் 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.நாளை NTR பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

Jr NTR To Team Up With KGF Director Prasanth Neel

இவர் அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை உறுதிசெய்யும் வகையில் இன்று NTR பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரசாந்த் நீல் ,ஒரு பயங்கரமான சக்தியுடன் இருப்பது குறித்து அறிந்துகொண்டேன்.அவருடைய சக்திக்கு நிகராக என்னுடைய சக்தியையும் சேர்க்கமுயற்சிக்கிறேன் என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரசாந்த் நீல்.பத்திரமாக இருங்கள் விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியானதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.