தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் Jr.NTR.கடைசியாக Aravinda Sametha Veera Raghava என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்த்தில் தயாராகி வரும் RRR படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவரோடு இணைந்து தெலுங்கின் மற்றுமொரு முன்னணி நடிகர் ராம்சரண் மற்றுமொரு ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் சில ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபடுத்துள்ளது.ஜூனியர் NTR சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.இவர் விரைவில் குணடமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இவர் அடுத்ததாக கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தில் நடிக்கவிருப்பதை பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்து உறுதி செய்துள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் இந்த படம் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.