தள்ளிப்போகிறது ஜீவாவின் சீறு ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | December 16, 2019 19:26 PM IST
கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து இவர் ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்றும் இந்த படம் பிப்ரவரியில் ரிலீசாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.