கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

Jiiva Pics

அருள்நிதியுடன் இவர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் Firstlook போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.தற்போது ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் இவர் நடித்துவரும் படத்தின் Firstlook வெளியாகியுள்ளது.

Seeru Firstlook

சீறு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva Seeru