தென் இந்தியா சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் குறித்த முக்கிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

Vijay Devarakonda

இஸ்மார்ட் ஷங்கர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் அடுத்த படத்தில் இவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை நடிகை சார்மீ தயாரிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Devarakonda Puri Jaggandah

இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும்,நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் பரவிவருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Vijay Devarakonda Jhanvi Kapoor