கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. சமீபத்தில் இதன் வெற்றியை கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடினர் படக்குழுவினர். அதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி தனது 25-வது படத்தில் நடித்துவருகிறார். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்குகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

jayamravi

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்குப் பூமி என்று பெயரை வைத்துள்ளனர். இமான் இசையில் டட்லி ஒளிப்பதிவில் படம் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜெயம் ரவி படம் ஹிட் அடித்து வருவதால் பூமி படமும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

boomi

jayamravi

ஜெயம் ரவி கைவசம் அஹ்மத் இயக்கும் 26- வது படமான ஜனகனமன படமும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படமும் உள்ளது என்பது கூடுதல் தகவல்.