அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Jayam Ravi

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Comali Jayam Ravi Stills

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது நண்பா நண்பா என்ற புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.