அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Jayam Ravi Getup

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

Comali Paisa Note

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுளள்து.இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ரன்டைம் வெளியிடப்பட்டுள்ளது.2 மணி நேரம் 22 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Comali Run Time