கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

Jayam Ravi Bhoomi FirstLook Out Niddhi Agerwal

Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பூமி என்று பெயரிட்டுள்ளனர்.

Jayam Ravi Bhoomi FirstLook Out Niddhi Agerwal

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.வித்தியாசமான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.